குவைத், செப்.29 உலகத் தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம், குவைத்தில் "தந்தை பெரியார் பிறந்த நாள் 142 விழா" காணொலிக்காட்சி வியாழன் இரவு 8.30 (இந்திய நேரம்) பெரியார் நூலகக் காப்பாளர் ச.செல்ல பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
குவைத் திமுக தலைவர் ஆலஞ்சியார், செய லாளர் சிதம்பரம் ந.தியாக ராஜன், பொருளாளர் ஜலீல் முஸ்தபா, துணைப் பொருளாளர் கறம்பகுடி ஜாபர் சாதிக், மீனா அப்துல்லா, மண் டல இளைஞரணி செயலாளர் மணி கண்டன், மக்கள் தொடர்பு செயலாளர் ஈரோடு முஸ்தபா, இணைச் செயலாளர் குடந்தை சி.தியாகராஜன், தகவல் தொடர்பு இணைச் செயலாளர் திரு வண்ணாமலை அஸ்ரப், இணைப் பொருளாளர் செம்மொழி அறிவுமணி, ஹாஜி அலி, இணைச் செயலாளர் பாப்பா தியாகராஜன் கலந்துக் கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகத் மாநில தலைவர் மா.அழகிரிசாமி, பாவலர் லதாராணி பூங்காவனம் சிறப் புரையாற் றினார்கள். பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தங்க தமிழ்செல்வன், வெற்றியூர் கமீ. அன்பரசன் (விசிக), மணிவாசகன் (மதிமுக), தூத்துக்குடி காசி, புதுவை ந.பாஸ்கரன் தஞ்சை தீனா, பெரியார் பிஞ்சு தஞ்சை சித்தார்த், தங்க ரமேஷ்குமார் பிரான்ஸ், மஞ்சுகுமார் (கன்னியா குமரி), ஓமன் திமுக சவுகத் அலி மற்றும் திராவிட சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment