1927 அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் பார்ப்பனர் அல்லாதார் வாலிபர் மாநாடு பல வகை களிலும் சிறப்பானது. அடிப்படை யான புரட்சிகர தீர்மானங்களைப் பிரசவித்த தாயின் கர்ப்பப்பை யாக இருந்தது என்று கூறலாம்.
அதில் ஒன்று ஜே.எஸ். கண்ணப்பர் முன்மொழிந்த தீர்மானம்:
‘‘சென்னை மாகாண அலு வலக ஆவணங்களில் ‘சூத்ரா' என்ற சொல் பயன்படுத்தப்படு வதை இந்த மாநாடு கவலை யுடன் பார்க்கிறது - பார்ப்பனரல் லாத சமூகத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக் களுக்கு, அவர்களின் சுயமரி யாதை உணர்வுக்குப் பெரும் இழிவை ஏற்படுத்துவதாக அமைந்தது ஆகும். எனவே, பழைய ஆவணங்களில் உள்ள இதுபோன்ற குறிப்புகளை நீக் குவதுடன், அலுவலக ஆவணங் களில் ‘சூத்ரா' என்ற சொல் எப்போதுமே பயன்படுத்தப்படக் கூடாது என்று அனைத்துத் துறைகளுக்கும் ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும்'' என்று அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானம் பார்ப்பன ரல்லாத ஒட்டுமொத்த சமூகத் தின் சுயமரியாதையைப் பற்றிய தாகும். பார்ப்பனரல்லாத மக்கள் சூத்ரர்கள் என்று அழைக்கப்படு கின்றனர். இதுவரை அவர்கள் அதைத் தங்களுக்கு அளிக்கப் பட்ட ஒரு பெரிய மரியாதை போலவே ஏற்றுக் கொண்டு வந்துள்ளார்கள். ‘ரிக்' வேதம் மற்றும் மனுசாஸ்திரத்தின்படி சூத்ரர்கள் என்றால், தாசி மகன் களாகும். அவர்கள் பார்ப்பனர் களுக்கு சேவை செய்ய வேண் டியவர்கள் ஆவர். இந்தப் பட்ட மும், அதனால் வரும் இழி வையும்விட மோசமான இழிவு வேறு எதுவும் இருக்க முடியாது; சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வடசென்னை ‘கருப்பர் நகரம்' (பிளாக் டவுன்) என்று அழைக் கப்பட்டதைவிட, இது மிகவும் மோசமானது. மக்களின் எதிர்ப் புப் போராட்டத்தின் காரணமாக நல்லவேளையாக அதன் பெயர் ‘ஜார்ஜ் டவுன்' என்று மாற்றப் பட்டு விட்டது. பஞ்சமர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களும் கூட அவ்வாறு தாங்கள் அழைக் கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரி வித்ததால், இப்போது அவர்கள் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அரசு ஆவணங்களிலிருந்து சூத்ரா நீக்கப்படவேண்டும்'' என் பதுதான் அந்தத் தீர்மானம்.
1871 பிரிட்டீஷ் இந்தியா காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்ªடுப்பில், சூத் திரர்கள் என்ற பதம் பயன்படுத் தப்பட்டுள்ளது என்றால் எத்த கைய கொடுமை?
மனுதர்மம், அத்தியாயம் 8; 415 ஆம் சுலோகம் என்ன சொல் லுகிறது?
‘‘சூத்திரன் ஏழு வகைப்படும். 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுப வன் 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன் 3. பிராமணனிடத் தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் 4. விபசாரி மகன் 5. விலைக்கு வாங்கப்பட்டவன் 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன் - சூத்திர னாவான்'' என்கிறது மனுதர்மம்.
‘‘சூத்திரன் என்றால் ஆத் திரம் கொண்டடி!'' என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது புரிகிறதா?
- மயிலாடன்
No comments:
Post a Comment