சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்கிறார்; வாழ்கிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்கிறார்; வாழ்கிறார்!


சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2020).


ஊழலும், கறைபடிந்த நிகழ்வுகளும் படர்ந்துள்ள நமது நாட்டின் அரசியலில், ஓர் அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தூயவராகவும், உயர்ஜாதியில், உயர் பொருளாதார அந்தஸ்துக் குரியவராக இருந்தும், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்தும், ஏழை, எளிய மக்களின் போராளியாகவும், கடைசி மூச்சுள்ளவரை, வாழ்ந்து மறைந்தும் மறையாதவராகித் திகழ்கிறார் அவர் வரலாற்றில்!


‘‘மண்டல் காற்று வீசுவதை நீங்கள் யாரும் தடுத்துவிட முடியாது இனி; இதற்காக ஒருமுறை என்ன, நூறு முறை வேண்டுமானாலும் எனது பிரதமர் நாற்கலியை இழக்கத் தயார்'' என்று முழங்கிய அரசியல் அதிசயம் - வி.பி.சிங்.


அவர் வாழ்கிறார் என்றும் வரலாற்றின் வைர வரிகளாய்! சமூகப் புரட்சிக்கு அரசியலில் திருப்பம் ஏற்படுத்த மக்கள் பிரதமராக இருந்ததோடு, மீண்டும் தேடி வந்த அப் பதவியை ஏற்க மறுத்து, எட்டாத உயரத்திற்கு உயர்ந்த அந்த மாமனிதர், தொண்டறத்தின் தூயவர் வாழ்க! வாழ்கவே!!


சமூகநீதி என்றாலே, அவர் நினைவு வரவேண்டும்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்.


சென்னை


25.6.2020


No comments:

Post a Comment