தமிழக சிறைத்துறை பெயர் மாற்றம்: ‘சிறை சீர்திருத்தத்துறை’ என்று அழைக்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

தமிழக சிறைத்துறை பெயர் மாற்றம்: ‘சிறை சீர்திருத்தத்துறை’ என்று அழைக்கப்படும்

அரசாணை வெளியீடு


சென்னை, ஜூன் 24, தமிழக சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறைகள் தண்டனை அனுபவிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகுப்பதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் இடமாகவும் உள்ளது.


பார்வையாளர்களை சந்திப்பதற்கு மட்டுமல்லாமல் கைதிகள் தங்கள் உறவினர்களோடு போனில் பேசுவ தற்கும் தற்போது வசதிகள் உள்ளன.இதுபோன்ற நல்வாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், தமிழக சிறைத்துறையை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என்று இனிமேல் அழைக்கப்படும்.


மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத் தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என்பது பெயர் மாற்றத்தின் ஆங்கில பெயரின், தமிழ் மொழி பெயர்ப்பாக சொல்லப்படுகிறது.


இருந்தாலும், ஆங்கில வார்த்தையின் சரியான தமிழ் வார்த்தைக்காக தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment