மதுரை, ஜூன் 24, மதுரையிலிருந்து காணொலி விழா சிறப்புக் கூட்டம் நெல்லை திண்டுக்கல் மண்டலங் களுக்கான விடுதலை விளைச்சல் விழா 15.6.2020 திங்கள் மாலை 7 மணிக்கு தொடங்கியது.
தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர் டேவிட் செல்லத்துரை தலைமையில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி.ப. பெரியாரடியான் வரவேற் புரையில் விடுதலை வீரவரலாறு குறித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கருத்துரையின் சிறப் புகளை விளக்கினார்.
கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் அறிமுக உரையில், கடந்த மூன்றரை மாத காலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாட்டை, வழிகாட்டும் நெறிமுறைகளை, விடுதலை வாயிலாக சமூகத்திற்கு ஏற்படும் பயனை எடுத்துக்கூறியதுடன், இச்சரியான நேரத்தில் நிதி வழங்கும் பொறுப்பாளர் களையும் வெகுவாகப் பாராட்டினர்.
நிகழ்வில் நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன், நெல்லை மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன், பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திராவிடச் செல்வன், போடி சுருளிராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர். விடுதலை வளர்ச்சி நிதி வழங்கினர். குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மூலமாக தலைவர் எம்.எம். சுப்பிர மணியம், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்கள் உ.சிவ தாணு, சே.வி. லூலியஸ், பழனி சங்கரநாராயணன் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிதி வழங்கினர்.
நெல்லை மண்டலத் தலைவர் பால்.ராசேந்திரம் தென்காசி த.வீரன், நெல்லை ரத்தினசாமி, நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி. பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி, நெல்லை அரியமுத்து ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மூலம் தொலை பேசிவழியே நிதியை அறிவித்தனர். நிறைவாக கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
காணொலிக் கூட்டத்தில் தேனி மாவட்டத் தலைவர் ரகு.நாகநாதன், அன்புபட்டி ஸ்டார் நாகராஜ், திண்டுக்கல் இரா.வீரபாண்டி, கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் நாகராஜ், மதுரை சுப்பையா, செல்லதுரை நா. முருகேசன், மா.பவுன்ராசா, முனைவர் வா.நேரு, சுப.முருகானந்தம், நாகை நாத்திக பொன்முடி, தஞ்சை பெரியார்செல்வன், சி.அமர்சிங், பிரான்ஸ் தங்க.ரமேஷ்குமார், தூத்துக்குடி ஆழ்வார், தஞ்சை ஏ.வி.என். குணசேகரன், பெரம்பலூர் தலைவர் தங்கராசு, விடுதலை ஆதவன் வள்ளியூர், இரேமஷ், அன்புச்செல்வன், கீழப்பாவூர் பொன்ராஜ், தூத்துக்குடி கார்த்திகேயன், கே.டி.சி. குருசாமி, ஆட்டோ செல்வம், காஞ்சித்துரை, தஞ்சை அருணகிரி, உத்திராபதி, தென் காசி வே.முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வை அமைப்புச் செயலாளர் வே. செல்வம், வா. நேரு, சுப.முருகானந்தம், பீபிகுளம் சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment