ஜெனீவா, ஜூன். 24 உலகளவில் பல நாடுகளில், கரோனா வைரஸ் உச்சத்தை எட்டியுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, வேகமாக உயர்ந்து வருகிறது.
இதற்கு, அதிக அளவில் பரிசோ தனைகள் மேற்கொள்வதை, முக்கிய காரணமாக கூற முடியாது. இது, வைரஸ் தாக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். அது, வேகமாகவும், வலிமையாகவும் பரவி வருகிறது.
இதற்கு, அமெரிக்கா, இந்தியா, தெற் காசியா மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், வைரஸ் தாக்கம் உச்சத்திற்கு சென்றுள்ளதே சான்று என, உலக சுகாதார அமைப்பின், அவசர உதவிப் பிரிவு தலைவர், மைக்கேல் ரையான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment