டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியதால் மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க. அரசு கவிழும் சூழலில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சந்திப்பைத் தொடர்ந்து விலக நினைத்த நான்கு சட்ட மன்ற உறுப்பினர்களும் கூட்டணியில் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர்.
- இந்த நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான இபோபிசிங்கை, மத்திய புலனாய்வுக்குழு, ஊழல் வழக்கில் மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- இந்திய லடாக் பகுதியில் மீண்டும் சீன ராணுவம் ஊடுருவி வருவதாகச் செய்திகள் வந்துள்ளன.
- விண்வெளி ஆராய்ச்சித்துறை இதுவரை அரசின் கட்டுப் பாட்டில் இருந்து வந்தது. தற்போது அதில் தனியாரும் பங்கேற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
மத்திய அரசின் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிலையங்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, உயர்ஜாதியில் பொருளாதாரப் பிரிவினர்க்கான 10% இட ஒதுக்கீட்டு இடங்களை அடுத்த கல்வி ஆண்டில் தொடர மத்திய மனிதவளத்துறை அனுமதி அளித்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ்
- 2019-20 ஆண்டுக்கான கணக்கை வருமானவரித் துறைக்குத் தாக்கல் செய்யும் கடைசித் தேதியை ஜூன் 30-க்குப் பதிலாக நவம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தி இந்து, டில்லி பதிப்பு:
- கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக, கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வினைத் தள்ளி வைத்திட பல்கலைக்கழக மான்ய குழு முடிவு எடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வைத் தள்ளி வைத்திட வேண்டும் என்ற வழக்கின் முடிவு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- இந்திய எல்லையில் கல்வான் பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என சீனா இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
- புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பாக அளிக்கப்பட்ட திட்ட வரைபடத்தை முற்றிலுமாக நிராகரிக்கக்கோரி, வரலாற்றாசிரியர் கள், வரைபட வல்லுனர்கள் 90 பேர் டில்லி நகர கலை ஆணையத் திற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
- பிற்படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் குறித்து ஆய்வறிக்கை அளித்திட மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையத்தின் பணியை மேலும் ஆறு மாதத்திற்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கரோனா நோயைக் குணமாக்கும் மருந்தினை தனது பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக தவறான விளம்பரம் செய்துள்ள நிறுவன அதிபர் பாபா ராம் தேவ் மீது பீகார் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவிட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா,
25.6.2020
No comments:
Post a Comment