கரோனா தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

கரோனா தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்  அறிவுறுத்தல்



புதுடில்லி, ஜூன் 25- கரோனா அறிகுறியுள்ள அனைவருக் கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்  அறி வுறுத்தி உள்ளது.


கரோனா நோய்த் தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வெளியிட் டுள்ள புதிய வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது: கரோனா அறிகுறியுள்ளவர்களுக்கான பரிசோதனையை விரிவு படுத்த வேண்டும். பரிசோ தனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை என்பது மட்டுமே நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழியாகும். எனவே, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் அறி குறி உள்ளவர்கள் அனைவ ருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு வலியுறுத் துவது அவசிமாகிறது. நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் என்பது நோய் பரவலைக் கட்டுப்படுத்து வதை மேலும் வலுப்படுத்தும்.


மருத்துவமனைகள், கட்டுப்பாட்டுப் பகுதிகள், சிவப்பு எச்சரிக்கை பகுதிகள், கரோனா தொற்று உள்ளவர் களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள், பயணம் மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே தற்போது பரி சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. 


ஆனால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவு களைச் சார்ந்த நிறுவனங்க ளுக்கு விரைவான ஆன்டி பாடி பரிசோதனையை நடத் தப்படவேண்டும். அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங் கள் மற்றும் மாநில அரசுகள் ஆன்டிஜென் சோதனைகளை செய்வதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.


இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment