நாட்டிலே புரட்சி மனப்பான்மையையும், போராடுந் திறனையும், வாலிபர் எழுச்சியையும், பழைமையில் வெறுப் பையும், புதுமையில் ஆர்வத்தையும் யார் ஏற்படுத்தினார்கள்? யார் இந்த நாட்டிலே ஜாதியால், சமயத்தால் வேற்றுமை ஏன்? தீண்டாமை என்பது எதற்கு? இந்து - முஸ்லிம் பிணக்கு ஏன்? பெண் அடிமை கூடுமா? என முதன்முதலாகத் தீரத்துடன் கேட்டனர்? யார் முதன்முதலாக நாட்டிலே சமுதாயக் கோளாறு ஒழிந்தாக வேண்டுமென எடுத்துக் கூறியது? உயர் ஜாதிக்காரனின் ஆணவம் ஒழிக்கப்பட்டே தீரவேண்டுமென முரசு கொட்டியவர் யார், பார்ப்பனியத்தின் கேடுகளைப் பாமரரும் உணரும்படியும், பலரும் அதனை ஒழித்தே தீருவோம் எனக் கங்கணங்கட்டிக் கொண்டு வேலை செய்யும் படியான துணிவு கொள்ளும்படியும் செய்தவர் யார்?
- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.7.1939
- ‘மணியோசை’
No comments:
Post a Comment