காவேரிப்பட்டணம் செவிலியர் குமுதா மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

காவேரிப்பட்டணம் செவிலியர் குமுதா மறைவு

தமிழர் தலைவர், தமிழக அமைச்சர், கழகப் பொறுப்பாளர்கள் இரங்கல்-மரியாதை



கிருட்டினகிரி, மே 19- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் கிருட் டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் வே. புகழேந்தி அவர்களின் வாழ்விணையரும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியருமாகிய குமுதா 15.5.2020 அன்று மறைந்தார்.


தமிழக அரசு சார்பில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மருத்துவமனை டீன் உள்பட மருத்துவ அலுவலர்கள் மரியாதை செலுத்தினர்.


திராவிடர் கழகம் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.அறிவரசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  பொதுக்குழு உறுப்பினர் தா. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன ஆகியோர்  முன்னிலை வகித்து இரங்கல் உரையாற்றினார்.


தருமபுரி மேனாள் மண்டல செயலாளர் கரு. பாலன், காவேரிப்பட்டணம் இளங்கோ, மருத்துவர் இ. ஆசைத்தம்பி, மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், ஓசூர் மாவட்டக் கழகத் தலைவர் சு.வனவேந்தன், தருமபுரி மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, அண்ணா.சரவணன்,  மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். கூட்டத்தில் தி. கதிரவன், வெ.நாராயண மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தி. அன்புச்செழியன் உள்பட கிருட்டினகிரி, ஓசூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட கழக மாவட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த செவிலியர் குமுதாவின் வாழ்விணையர் புகழேந்தியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment