கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
சிதம்பரம், மே.30 சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழக காணொலி கலந்துறவாடல் கூட்டம் மே 6 ஆம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில், திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்திலீபன் வரவேற் புரையாற்றினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார். நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை யாற்றினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
பெரியாரின் மண்டை சுரப்பை இன்று உலகம் தழுவி விரிந்திருக்கிறது. இணைய வழியாக நாம் தமிழகம் முழுவதும் தோழர்களை சந்தித்து பேசி வருகிறோம். கம்பியில்லாத போன்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசும் சாதனங்கள் வரும் என நம் தந்தை பெரியார் அவர்கள் தொலை நோக்கோடு அறிவித்தது நினைவுக்கு வருகிறது. இந்த கருத்துகளை தான் அண்ணா இனி வரும் உலகம் எனும் நூலாகத் தொகுத்தார்.
சிதம்பரம் நகருக்கு கூடுதல் சிறப்புண்டு. "தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகம் தொழும். மனக் குகையில் சிறுத்தை எழும். பார் அவர்தாம் பெரியார்" என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இதே ஊரில் தான் தந்தை பெரியார் குறித்த கவிதையை இயற்றினார். இதையேதான் யுனெஸ்கோ நிறுவனமும் கூறியது 'புத்துலகின் தொலை நோக்காளர் பெரியார்' என்று. இந் நிலையில் கரோனா பாதிப்பால் உலகமே முடங்கியிருக்கக்கூடிய நிலையில் நமது தோழர்கள் முடங்கி விடக் கூடாது என்பதற்காக நமது தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்வேறு வழிகாட்டுதல் களை வழங்கி வருகிறார் அதை நாம் ஏற்று செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைப் பாளர் கா.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் பெரியார்தாசன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன், மாவட்ட ப.க தலைவர் அசோக் குமார், மாவட்ட ப.க செயலாளர் செங்குட்டுவன், ப.க துணைத் தலைவர் கலைச் செல்வன், சிதம்பரம் நகர அமைப்பாளர் செல்வ ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இ.அதியமான் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மாவட்ட ப.க தலைவர் அசோக்குமார் பூந்தோட் டம் கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் நிகழ்ச்சிகளை பரப்பினார்.
No comments:
Post a Comment