பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் உரை
விருத்தாசலம், மே 30 விருத்தாசலம் கழக மாவட்ட காணொலி கலந்துறவாடல் கூட்டம் மே 7 ஆம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்றார். மாவட் டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார். கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டலச் செய லாளர் நா.தாமோதரன், மாவட்ட அமைப் பாளர் வை.இளவரசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடக்க வுரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது, கரோனாவால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடு கள் குறித்தும், அவற்றிலிருந்து மீள்வதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நமக்கு வழங்கியுள்ள கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டும்.
நமது கடலூர் மண்டலத்தில் உள்ள மாவட் டங்களை பார்க்கின்ற போது விருத்தாசலத்தில் அதிகளவிலான இளைஞர்கள் இயக்கத்தில் பணி யாற்றி வருகின்றனர். நம்மை பொறுத்தவரையில் ஒவ்வொரு தோழர்களும் குறைந்த பட்சம் 10 தோழர்களையாவது இயக்கத்தில் இணைப்போம் என்ற உறுதியேற்க வேண்டும். இன்னும் ஏராள மான இளைஞர்களை இயக்கத்தின் புதுவரவுகளாக சேர்க்க வேண்டும் எனப்பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட முன்னாள் செயலாளர் முத்து.கதிரவன், விருத்தாசலம் நகர தலைவர் நா.சுப்பிரமணியன், நகர செயலாளர் த.சேகர், விருத் தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பால முருகன், கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், மங்களூர் ஒன்றியத் தலைவர் இரா.ஆறுமுகம், பெண்ணாடம் நகர அமைப்பாளர் ந.சுப்பிரமணியன், திட்டக்குடி நகர தலைவர் வெ.அறிவு, மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர் அ.பழநி யாண்டி, மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் வெங் கட.ராசா, வேப்பூர் வட்டார செயலாளர் அ.பன்னீர்செல்வன், கழுதூர் ம.இளங்கோவன், மாவட்ட ப.க அமைப்பாளர் சண்முகம், கழுதூர் கண்ணதாசன், இளைஞ ரணி தோழர்கள் ஆ.அறிவுச்சுடர், இ.இளங்கனி, சிங்கப்பூர் கவிஞர் ஆ.சு, சிறுநெசலூர் பிரகாஷ், விருத்தாசலம் கு.பிரவீன்குமார், பாரதிராஜா, ஆனஸ்ட்ராஜ், காமராஜ் உள்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment