பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை
கோவை, மே 30-- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காணொலி வாயிலாக ‘காவி இருளும், பெரியார் ஒளியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமை யில், மண்டல செயலாளர் ச.சிற்றரசு முன்னிலையில், பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார். பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
அவர் உரையில் குறிப்பிட்டதாவது,
கரோனா வைரஸ் அச்சம் அறிவியல் அறியாமையால் அச்சத்தில் இருந்து ஆரம்பமானது. பயம்தான் கடவுள் நம்பிக்கைக்கு காரணம். பாது காப்பற்ற சூழலில் வெள்ளம், நெருப்பு போன்ற அளவுக்குமீறிய அச்சம் அறியாமையைத்தான் உரு வாக்கும்.
கரோனா வைரஸ் அறியாமையால் கோவில்கள், சர்ச், மசூதி ஆகியவை தற்போது மூடப்பட்டுள்ளன. “சொர்க்கவாசல்" மூடப்பட்டன. எல்லாக் கோயில்களும் கரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ளன. பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தோம் என்றால் அது நடந்தே தீரும் என்பதற்கு உதாரணம்தான் தற் போதைய நிகழ்வுகள். ஊரடங்கு பல ஆபத்துகளை கொண்டது. கரோனா அச்சத்தை உருவாக்கி, அச்சத்தையே வளர்த்தது. இந்தியாவில் மிகப்பெரிய ஆபத்து இந்துத்துவம் -காவி இருள்.
வாட்ஸ்அப் வதந்தி ஆபத்து, கரோனா வைரஸ் ஆபத்து, அதைவிட ஆபத்தானது சங்கி வைரஸ்.
கேள்வி கேட்டு நாம் விளக்கமாகக் பதில் சொன்னால், புரிந்ததா புரியவில்லையா என கூட பதில் சொல்லாமலே, அடுத்த அடுத்த கேள்விகளை அருவருக்கத்தக்க, ஆபாசமான வார்த்தைகளோடு கேள்வி எழுப்புவது சங்கிகள் வேலை.
ஊரடங்கு காலத்திலும் இந்தியாவை தனிய £ருக்கு கூறுபோட்டு விற்கும் காவிஇருள் கொடுமை கள் நடைபெறுகிறது. மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால், உயர் ஜாதியினருக்கு, பார்ப்பனர்களுக்கு மட்டும் பொரு ளாதாரத்தில் பின்தங்கியோர் என்கிற பெயரில் 10 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு. தேசிய கல்விக் கொள்கை நேரடியாகவே நடைமுறைப்படுத்தும் சூழல், காவி இருள் தமிழகத்தில் எழுந்ததே.
தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் முன்னெடுத்த தனது வலுவான பிரச்சா ரத்தை தமிழக மக்கள் முன் வைத்தது. அதனால் தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பை சவப்பெட்டியில் வைத்து ஒவ்வொரு ஆணியாக அடிக்கும் காவி இருள். பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி கேவலமாக பேச பயிற்சி தரும் காவி இருள். சாதிக்கொடுமை பட்டியலின மக்களிடம் ஜாதி வெறியை தூண்டும் கொடுமை. ஜாதி வெறியும் பேசும், இந்து என்றும் பேசும். இதுதான் காவி இருள்.
ஏழைகளுக்கு ஒரு வாய் தண்ணீர் குடி என்று சொல்ல ஆளில்லை ஆனால் ஜலசக்தி திட்டம் காவிஇருள். காவிரி ஆணையம் கலைப்பு. ஜன்தன் திட்டம் எல்லாம் சமஸ்கிருத பெயர்கள் திணிப்பு.
இஸ்கான் எனும் அமைப்பு பூண்டு வெங்காயம் இல்லாமல் உணவு போடுவோம் என்று சொல்ப வர்களை வைத்து சத்துணவு போடுவோம் என்று சொல்கிற கொடுமை காவி இருள்.
வாட்ஸ்அப் வதந்திகளுக்கு பதிலாக நம் வரலாற் றுப் பதில்களை முறையாக தந்தால் போதும். பெண் விடுதலையே மானுட விடுதலை என 1930இலேயே முழங்கியது திராவிட இயக்கம்தான். ஆர்எஸ்எஸ் என்கின்ற ஆபத்தான பாம்பை விரட்ட நாம் எச்சரிக்கையோடு களத்தில் இருப் போம். மதவாதப் பாம்பை விரட்டி, காவிப் போர்வையை, காவி இருளை விலக்கி, பெரியாரின் அறிவு ஒளியை பரப்புவதே நம் தலையாய கடமை. அதைச் செய்வோம் பெரியார் வழியில் காவி இருள் போக்குவோம் என கூறி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கோவை மாவட்டக் கழகத் தோழர்களை பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
கழகத் துணைத் தலைவர்
கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் அவர்கள் தனது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முகநூல் பக்கங் களில், ஆசிரியர் அறிக்கைகள் பதிவிடப்படுவதை சுட்டிக்காட்டியும், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முகநூல் பக்கங்களையும் நாம் படிக்க வேண்டும். முகநூல் பின்னூட்டங்களில், சங்கிகள் வந்து எப்படி ஆபாசமான பேச்சுகளை, கருத்துகளை பதிவு செய்கிறார்கள், அதற்கு தக்க பதிலடி கொடுக்க பெரியார் பயிற்சிக் களம் போன்ற வலைதளங்களை படிக்க வேண்டும். நம் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விடுதலை நாளிதழ் வாட்ஸ்அப்வழி பரப்பும் களப்பணியை தொடர்ந்து செய்வோம் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவோம் என எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு. இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தரும.வீரமணி, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மண்டல மகளிரணி செயலாளர் பா.கலைச்செல்வி,
மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, குன்னூர் மாவட்ட கழகச் செயலாளர் நாகேந்திரன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகம் அக்ரி நாகராஜ், மேட்டுப்பாளையம் மகளிர் பாசறை தலைவர் ரா.நாகமணி, மாணவர் கழகம் ரா.அன்புமதி, நந்தகுமார், திருவள்ளுவன். முரு கேசன், மகளிரணி திலகமணி, வ.ராஜேஸ்வரி, கவிதா, தேவிகா, கோவை மாணவர் கழகம் தி.ச. யாழினி, தி.ச.கார்முகிலி, த.க.கவுதமன், த.க.யாழினி, தமிழ்ச்செல்வன், தமிழ்முரசு, புளியகுளம் க.வீர மணி, கிருஷ்ணமூர்த்தி, புண்ணியமூர்த்தி, ஆட்டோ சக்தி, பொன்ராஜ், அருண், இடையர்பாளையம் கோபாலகிருஷ்ணன், முத்துமலையப்பன் மற்றும் பொத்தனூர் சண்முகம், மும்பை தோழர்கள் கணே சன், ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி பொறியாளர் தி.பரமசிவம், வீரமலை, ஆனந்தசாமி, முருகானந்தம், தஞ்சை ஏ.வி.என்.குணசேகரன், கரூர் ஜெகநாதன், திருவாரூர் பிளாட்டோ அழகர் மற்றும் அ.மு.ராஜா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் இராசி.பி ரபாகரன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment