அழகர் ஆற்றில் இறங்கவில்லை - அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
பட்டுக்கோட்டை,மே 19, பட்டுக்கோட்டை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 3.05.2020 அன்று மாலை 5 மணி அளவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையிலும் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சேகர் அனை வரையும் வரவேற்றும், கரோனா ஊரடங்கு காலத்தில் தான் மேற்கொள் ளும் இயக்கப் பணிகள் குறித்தும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தான் படிக்கும் நூல்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர் உரை
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிற்கு முத்திரை பதித்த ஊர் இந்த பட்டுக்கோட்டை மாவட்டம். காணொலி வாயிலாக பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தோழர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. வரலாற்றில் பல சாதனைகளை செய்த இயக்க முன்னோடிகள் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்றவர்கள் வாழ்ந்த ஊர் இந்த பட்டுக்கோட்டை பகுதி. காலம்காலமாக நாம் செய்துவந்த பிரச்சாரம் இன்றைக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பான ஊரடங்கு காரணமாக வெற்றி பெற்றிருக்கிறது. மதுரையில் சித்திரை 1 கோலாகல விழா அழகர் ஆற்றில் இறங்குவார் என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைக்கு என்ன ஆச்சு? ஒன்றும் இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. அது மட்டுமல்ல அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டி போராட் டங்களை அறிவித்தார். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக் கிறோம். ஆனால், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனரல்லாதவர்கள் சூத்திரர்கள் கருவறைக்குள் சென்றால் சாமி சிலை தீட்டாகிவிடும் சாமி செத்துவிடும் என்று சொன்னார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு பட்டர் அவருடைய தாயார் மரணமடைந்தார், இந்த பட்டர் அமெரிக்கா சென்று வந்த செய்தியை மறைத்து விட்டார்கள் அவர் மூலம்தான் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் இன்றைக்கு அந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறைக்குள் சென்று கிருமிநாசினி அடித்திருக்கிறார்கள், யாரென்றால் தாழ்த்தப் பட்டத் தோழர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள் மற்றவர்கள் சென்றால் கருவறை தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துவிடும் என்று சொன்னார்கள். இன்று கோயில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டத் தோழர்கள் கிருமிநாசினி அடித்திருக் கிறார்கள் ஒருவகையில் இந்த கரோனா ஜாதி, கடவுள், மதத்தை ஒழித்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையை கழகத் தோழர்கள் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஏதோ பெரிய நெருக்கடி என்று தோழர்கள் நினைத்துவிடக்கூடாது. நெருக்கடி காலத்தில் கூட அன்னை மணியம்மையார் விடுதலை நாளிதழினை நடத்தவில்லையா? இயக்கம் எதிர்காலத்தில் வலிமையாக இருக்க வேண்டு மென்றால் இளைஞர்களின் செயல்பாடு தான் முக்கியம். நமது இயக்கம் ஒரு புரட்சிகரமான இயக்கம், இன்றைக்கு மதவாத இருள் இந்தியாவை கவ்விக் கொண்டு இருக்கிறது, தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்தான் அதற்கு மருந்து. ஆகவே, தோழர்களே எதிர்காலம் நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய உழைப்பும் சிந்தனையும் இயக்கத்தை நோக்கி இதைவிட பலமடங்கு உயர வேண்டும் என குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியவர்கள்:
தஞ்சை மண்டலச் செயலாளர் குடந்தை கா.குருசாமி, பட்டுக்கோட்டைக் கழக மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் அ.நல்லதம்பி, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மண்டல இளைஞரணிச் செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட துணைத் தலைவர் இரா.நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நடராஜன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வள்ளுவப்பெரியார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் இரவிச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து.துரைராஜ், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய கழக அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் வீரமணி, பட்டுக்கோட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் காமராஜ், பேராவூரணி நகரத் தலைவர் குல.அரங்கசாமி, மதுக்கூர் நகரத் தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் பாலசுப்பிர மணியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அரவிந்தன், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் கவுதமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சு.வசி, விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் அ.திருப்பதி, அறந்தாங்கி மாவட்ட இளை ஞரணித் தலைவர் மகாராசா, மேனாள் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ஆத்மநாதன், பகுத்தறிவாளர் கழகம் மாணிக்கச்சந்திரன், பேராவூரணி மதியழகன். மணல்காடு சிவஞானம் இளைஞரணி தோழர் அத்திவெட்டி ராஜ்குமார், தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு கரோனா தொற்று பரவுதல் குறித்தும் தங்கள் பகுதியில் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தங்களால் செய்யப்பட்ட உதவிகள் குறித்தும் எடுத்துக்கூறி இந்த கரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் தாங்கள் மேற்கொண்ட கழகப் பணிகள் மற்றும் படித்த நூல்கள்குறித்தும் எடுத்துக்கூறினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்: 1 - இரங்கல் தீர்மானம்: பேராவூரணி நகர திராவிடர் கழகச் செயலாளர் சி.சந்திரமோகன் தந்தையார் திமுக மூத்த உறுப்பினர் பொன்காடு வே.சின்னையன் மறைவிற்கும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் வீர.முருகேசன் சகோதரரும் பள்ளத்தூர் ஊராட்சிமன்ற தலைவருமான வீர.மாரிமுத்து, மதுக்கூர் ஒன்றியம் மண்டலக்கோட்டை கழக பொறுப்பாளர் சரவண னின் தாயார் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது
தீர்மானம் 2: கரோனா வைரஸ் பெரும்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மற்றும் உலகம் முழுவதும் இப்பெரும் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது
தீர்மானம் 3 : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்கள் குடும்பத்தையும் மறந்து உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், மருத்துவ உதவி யாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் மனிதநேயப் பணிக்கு இக்கூட்டம் நன்றியையும், பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 : கரோனா வைரஸ் பரவி உலகத்தை அச் சுறுத்தும் இக்கட்டான இக்காலகட்டத்தில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்களுடன் கைப்பேசி வழியாக நலம் விசாரிப்ப திலும், காணொலி வழியாக கழகத்தின் அனைத்து அணியின் மாநில, மண்டல, மாவட்டக் கழக பொறுப்பாளர்களுடன் கலந்துறவாடி, கழகத் தோழர் களுக்கு உற்சாகத்தையும், ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள், வாழ்வியல் சிந்தனைகளையும், வழங்கிவரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாட்டிற்கு இக்கூட்டம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5 : கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் போராட்டம், மாநாடு, ஆக்கப்பணிகளில் முழுவதுமாக செயல்படுவது என ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது
தீர்மானம் 6 : கரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களாக மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் வறுமை நிலையில் உள்ளோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், அன்றாடம் பிழைப்பு நடத்துவோருக்கு தமிழக அரசு மட்டும் ரூபாய் ஆயிரம் பணமும், அத்தியாவசிய பொருட்கள் சில வற்றையும் வழங்கிவிட்டு இருப்பது மிகுந்த வேதனைக் குரியது என்பதை சுட்டிக் காட்டுவதுடன், பாதிப்புக் குள்ளான மக்களை கணக்கெடுத்து அவர்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான உதவியை மத்திய, மாநில அரசுகள் செய்திட முன்வர வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 : காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்தின்கீழ் இணைப்பது என்கிற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 25.4.2020 தேதியிட்ட கண்டன அறிக்கையை இந்த கலந்துரை யாடல் கூட்டம் வழிமொழிந்து, மத்திய அரசு உடனடியாக அந்த திட்டத்தினை கைவிடக்கோரி வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் போராட் டங்களை எழுச்சியோடு நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
No comments:
Post a Comment