திருவெறும்பூர், மே 19, திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 3.5.2020 அன்று மாலை 4 மணி அளவில் காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் வ.மாரியப்பன் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் இயக்கப் பணிகள் குறித்தும் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். பெல் ம.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோரும் உரையாற்றினர். இறுதியாக ரூபியா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். கூட்டத்தில் கலந்து கொண்டோர்: ஒன்றியத் தலைவர் வ.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் பெல் ம.ஆறுமுகம்,காட்டூர் கனகராஜ், மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், அசோக்குமார், ஆண்டிராசு, திலிப்குமார், வில்வம், கங்காதரன், மின்னல், சிவா னந்தம், சண்முகம், விடுதலை கிருட் டினன், ஸ்டாலின், மாவட்ட மகளிரணித் தோழர்கள் :கிரேசி, ரெஜினா பால்ராஜ், சாந்தி,ரூபியா மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment