சென்னை - ஓட்டேரியில் கழகப் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

சென்னை - ஓட்டேரியில் கழகப் பிரச்சாரக் கூட்டம்

featured image

சென்னை, மார்ச் 18- வடசென்னை மாவட்டக் கழக சார்பில், 8.3.2024 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி தெரு – அய்ந்து விளக்கு அருகில், ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?” என்கின்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
த.இளவரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ. கணேசன், மாவட்ட இளைஞ ரணித் தலைவர் நா.பார்த்திபன், மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, க.கலைமணி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, க.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் தமிழினியன், சி.பி.அய்.(எம்) பகுதிச் செயலாளர் செல்வராஜ், அயன்புரம் கழக தலைவர் சு.துரைராசு ஆகியோர் உரையாற்றினர்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இந்தியா கூட் டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டியதின் கட்டாயத்தை விளக்கி விளக்க மாகப் பேசினார்.

நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பி.ஜே.பி. ஆட்சியின், அவலங்களையும், பிரதமர் மோடியின் ஆர்.எஸ்.எஸ். அடிமைப் போக்கையும் விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினார்.
ஓட்டேரி திராவிடர் கழகம் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்புரையாளர் களுக் கும், ஓட்டேரி கழகப் பொறுப் பாளர்களுக்கும், அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பிக் கப்பட்டனர்.
பிரிக்ளின் சாலையில் கழகக் கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டு, கொள்கைப் பிரச்சார பேனர்க ளுமே கட்டப்பட்டிருந்தன.
கூட்டத்தில் உடுமலை வடி வேல், எஸ்.டி.சேகர், ஊடகவியலா ளர் ஜோதி ராமலிங்கம், த.யாழ் தமிழ், த.திராவிட இலக்கியா, த.திராவிட எழில், ந.செந்தமிழ், வி. குமாரப் பாண்டியன் உள்ளிட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக சி.பாசுகர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment