கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ பீகாரில் தனது ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டாததைக் கண்டித்து, ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மோடி அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார்.
♦கோவையில் பள்ளி மாணவர்களை அழைத்து வாகன பேரணி நடத்திய விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்தது குறித்தும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
♦ பிரதமருக்குதான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டு போகிறார் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் திட்டத்தில் பாஜக நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் வெளியாகி உள்ளது எனவும் பெண் சக்திகளை பற்றி பேசிய பிரதமர், மணிப்பூர் சம்பவம் குறித்து பேசாதது ஏன்?, “பிரதமர் மோடி, மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ஆறுதல் கூறினாரா? போன்ற கேள்விகளையும் டி.ஆர்.பாலு எழுப்பினார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ 5 நியாயங்கள், 25 உறுதிமொழிகள் என்ற முழக்கத்து டன் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட உள்ளது.
♦ ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது என்கிறார் மூத்த பத்திரிக்கை யாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.
♦ தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், பாஜக மீது கடும் தாக்கு. தன்னை ஓரம் கட்டுவதாக புகார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வலுத்த நிலையில் ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரியுள்ளார்.

தி ஹிந்து:
♦ பிரதமர் நரேந்திர மோடியின் 400 இடங்கள் என்பது வெற்று கோஷம். பாஜகவின் ராமர் கோவில் ஆடுகளம் மக்களவைத் தேர்தலில் “பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என சட்டீஸ்கர் மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நம்பிக்கை.
♦ ‘விவசாயம் மீதான கார்ப்பரேட் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கைப் பாதைக்கு எதிராக ஒட்டு மொத்த சமூகமும் விரைவாகச் செயல்பட வேண்டும்’ என்று ‘நேஷன் ஃபார் ஃபார்மர்ஸ்’ தளத்தின் கிசான் மஸ்தூர் கமிஷன் வேண்டுகோள்.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment