தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் சிறப்புக் கருத்தரங்கம்

featured image

சென்னை,மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2024 அன்று காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அன்னை மணியம்மையார், தந்தைபெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்தரங்கம்

அதனைத்தொடர்ந்து, பெரியார் திடலில் அமைந்துள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் அனைவரையும் வரவேற்றார்.
கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பசும்பொன், சி.வெற்றிசெல்வி, இறைவி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜகான், வி.வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, இரா.சு.உத்ரா பழனிச்சாமி, அன்புசெல்வி உள்ளிட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை தோழர்கள் முன்னிலை வகித்தனர். கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.

புத்தக வெளியீடு

இயக்க வெளியீடுகள் ரூ.655 மதிப்பில் 13 புத்தகங்கள் கொண்ட தொகுப்பு ரூ.500க்கு வழங்கப்பட்டது. நன்கொடை ரூ.500 மதிப்பில் அன்னை மணியம்மையார் களஞ்சியம் புத்தகம் ரூ.400க்கு வழங்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை வெளியிட்டார். சைதை மு.ந.மதியழகன், தகடூர் தமிழ்ச்செல்வி, செ.பெ.தெண்டறம், தங்க.தனலட்சுமி, ஆ.வெங்கடேசன், வி.மோகன், கு.சோம சுந்தரம், செல்வ. மீனாட்சி சுந்தரம், விழிகள் வேணுகோபால், பெரியார் செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி உள்பட பலரும் வரிசையில் சென்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு

கருத்தரங்கில் உரையாற்றும் சிறப்பு விருந்தினர்கள் மருத்துவர் ப.மீ.யாழினி, உமா ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்’ புத்தகத்தை வழங்கி சிறப்பு செய்தார்.
கழகப்பிரச்சாரச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி தலைமையுரையைத் தொடர்ந்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் ஊடகவிய லாளர் உமா Ôஅன்னை மணியம்மையாரின் போர்க்குணம் எனும் தலைப்பிலும், திமுக மகளிரணி மாநில சமூக ஊடகப்பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினி அன்னை மணியம்மையாரின் தொண்டுள்ளம் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

தமிழர் தலைவர் சிறப்புரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.
வட சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்க நல்லூர், திருவொற்றியூர் உள்ளிட்ட கழக மாவட்டங்களி லிருந்து கழகப்பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment