3.31 லட்சம் அங்கன்வாடிக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

3.31 லட்சம் அங்கன்வாடிக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் அங்கன்வாடி மய்யங்களிலிருந்து நிகழாண்டில் நிறைவு செய்து வெளியேறவுள்ள 3,31,548 குழந்தை களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத் தரவிட்டுள்ளனர்.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக் கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மய்யங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர். அந்தவகையில், இந்த மய்யங்களில் முன்பருவக் கல்வியை 3,31,548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வரவுள் ளனர். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 19,242 குழந்தைகளும், மதுரையில் 18,127 குழந்தைகளும் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் ஆலோ சனையின்படி, அந்தந்த முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலருடன் சேர்ந்து செயல் பட்டு அங்கன்வாடி மய்யங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனை வரையும் அரசுப் பள்ளிகளில் சேர வழிசெய்ய வேண்டும். மேலும், வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர் களுக்கும் அரசு தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும்.
இந்த மாணவர் சேர்க்கை விவ ரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment