மீண்டும் வன்முறை ஓராண்டைத் தொட்டும் அமைதியிழந்த மணிப்பூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

மீண்டும் வன்முறை ஓராண்டைத் தொட்டும் அமைதியிழந்த மணிப்பூர்

featured image

இம்பால், ஜன.31 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித் தது. இதில் நூற்றுக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை நிகழ்வு நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநிலத் தில் ராணுவத்தினர் குவிக்கப் பட்டனர்.
ராணுவ கண்காணிப்பு மூலம் அம்மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராக துவங்கியது. எனினும், அவ் வப்போது வன்முறை நிகழ்வு நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது. அந்த வகை யில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த வரிசையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் நிகழ்வு அரங்கேறியது. இன் றைய தாக்குதலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அய்ந்து பேர் காய முற்றதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கவுட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத் தப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என அஞ்சப்படு கிறது. மேலும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் காவல் துறை யினர் சார்பில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment