
பாட்னா,ஜன.31- பீகார் மாநிலத் தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது;-
“பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்துத் துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
எஸ்.சி., ஓ.பி.சி. மற்றும் பிற பிரிவினரின் சரியான மக்கள் தொகையை கண்டறிய நம் நாட்டில் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. மணிப்பூரில் உள்நாட்டுப் போருக்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் அங்கு செல்லவில்லை.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment