மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக நடந்து கொள்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக நடந்து கொள்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே

featured image

பெங்களூரு,ஜன.28 – கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவல கத்தில் குடியரசு நாளில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைருமாகிய மல்லி கார்ஜூன கார்கே தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் அரசமைப்பு சட்டத்தை சிதைத்து அதில் மாற்றங்களை செய்ய, திட்டம் தீட்டி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கைப் பாவையாக பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்த லில் ஒற்றுமையையும், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காத்திட வேண்டும் என்றார்.
தலைவர்களின் நீண்ட கால சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னர், அரசமைப்புச்சட்டமே இல்லாமல் ஆகிவிடும், ஜனநாய கத்தை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அரசமைப்புச் சட்ட முகவுரை யில் முக்கிய கொள்கைகளாக சமத்துவம், சகோதரத்துவம், மத சார்பின்மை மற்றும் நீதி குறிப் பிடப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசமைப்புச்சட்டத்தை சிதைக்க வும், அதனை மாற்றவும் முயற்சித்து வருகின்றன.
தன்னாட்சி நிறுவனங்களை ஒவ்வொன்றாக அழிப்பது அல்லது நலிவுறச் செய்வதுமாக செய்து வருகின்றன.
குறிப்பாக மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக மாறி செயல்படுகிறார். நம்முடைய நீதித்துறை, மதசார்பின்மை பாதிக் கப்பட்டு வருகின்றன.

-இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment