சென்னை,ஜன.31- இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்களில் தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருக்கிறது. ஏதோ தங்களுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒன்றிய அரசு நடிக்கிறது. இட ஒதுக்கீடு என்ற தேன்கூடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். சமூக நீதிக்கு சமாதி கட்டும் நோக்கில் சதிச் செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசையும் பல்கலைக்கழக மானியக் குழுவையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்து சக்திகளும் ஓரணியில் திரண்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜ அரசின் சதிச்செயலை முறியடித்து சமூக நீதியை காக்க முன்வரவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இட ஒதுக்கீடு உரிமையை காக்கவும், பாஜ அரசுக்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
Wednesday, January 31, 2024
Home
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை
இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment