தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர் தகவல்

featured image

சென்னை, ஜன.31 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு ரூ.135.48 கோடி மதிப் பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: :
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன் படுத்தவதற்குரிய அனைத்து வசதி களுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள் முதல் செய்யப்படவுள்ளன. இதனை தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூ.135.48 கோடி மதிப்பீட்டில்தயாரித்து வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத் துக்கு 26 பேருந்துகளும், சேலம் அரசுபோக்குவரத்துக் கழகத் துக்கு 16 பேருந்துகளும், கோயம் புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்கு வரத்துக் கழகத்துக்கு 38 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 33 பேருந்துகளும் மற்றும் திரு நெல்வேலி அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு 17 பேருந் துகள் என பகிர்ந்து வழங்கப் படவுள்ளன.
இவ்வாறு 150 புதிய தாழ்தள நகர பேருந்துகள் பொது மக்களின் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்முதல் செய்யப் படவுள்ளன. இந்த முயற்சிகளின் வாயிலாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழ்நாட்டை முதன்மையான நிலைக்கு உயர்த்திடும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment