ஒன்றிய அரசின் பாரபட்சம் மாநிலங்களுக்கு வரி பகிர்வு உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.13000 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.2976 கோடி தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

ஒன்றிய அரசின் பாரபட்சம் மாநிலங்களுக்கு வரி பகிர்வு உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.13000 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.2976 கோடி தானா?

புதுடில்லி, டிச.23- மாநிலங்களுக் கான வரி பகிர்வுத்தொகை ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி மட்டுமே விடுவிக் கப்பட்டுள்ளது.
நிதி ஆணையத்தின் பரிந்து ரையின்படி ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் ஒரு நிதியாண்டில் 14 தவணைகள் மூலம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக் கப்படுகிறது. பெருநிறுவன வரி, வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி (சரக்கு, சேவை வரி) போன்றவற்றில் ஒன்றிய அரசுக் குக் கிடைக்கும் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக் கப்படுகிறது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு வருகிற ஜனவரி மாதம் வழங்கவேண்டிய வரி பகிர் வுத் தொகை ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு முன் கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழ் நாட்டுக்கு ரூ.2,976 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:-
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூ.72,961.21 கோடி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 10-ஆம் தேதி விடுவிக்கப்பட வேண்டிய இந்த வரி பகிர்வு தவணைத் தொகை, கடந்த 11-ந் தேதியே விடுவிக்கப்பட்டு விட்டது.
விழாக்கள் மற்றும் புத்தாண் டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வ தற்காக மாநில அரசுகளின் கரங் களை வலுப்படுத்த இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.13,088.51கோடி. பீகாருக்கு ரூ.7,338.44 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, மேற்குவங் காளத்துக்கு 5,488.88 கோடி, மராட்டியத்துக்கு ரூ.4.608.96 கோடி, ராஜஸ்தானுக்கு 4,396.64 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.10 கோடி, ஆந்திராவுக்கு ரூ.2,952.74 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment