சுயமரியாதை நாள், இயக்கப் பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா திரட்டுதல் தாம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

சுயமரியாதை நாள், இயக்கப் பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா திரட்டுதல் தாம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

தாம்பரம், நவ. 28- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தாம் பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலை யத்தில் 26.11.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியவில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து கருத் துரையாற்றினார். தலைமையின் கட்டளைக்கிணங்க இயக்கத்தில் முனைப்புடன் செயலாற்ற வேண் டியது, கழக செயல்பாடுகளில் தோழர்களின் பங்களிப்பு மற்றும் இணைய செயல்பாடுகள், சமூக ஊடகங்களில் அனைவரும் கவ னம் செலுத்துவது, பொதுமக்களை எளிதில் சென்றடையக்கூடிய அள விற்கு கழகப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது உள்பட பல்வேறு கருத் துகளை எடுத்துரைத்தார். விடு தலை வாசகர் வட்டம் அமைத்து தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,செயலாளர் கோ.நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது  பிறந்தநாள், இயக்கப் பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா திரட்டு தல் ஆகியவை குறித்து கலந்துரை யாடல் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் "விடுதலை சந்தா சேர்ப்பு" சம்பந்தமாக தங்க ளின் மேலான கருத்துகளை வழங்கினர்.

கூட்டத்தில், மகளிரணி தோழர் கள் மோ.மீனாம்பாள், இரா.சு. உத்ரா பழனிசாமி, சோமங்கலம் அ.பா.நிர்மலா, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.தா.சண் முகசுந்தரம், கூடுவாஞ்சேரி மா.இராசு, மா.குணசேகரன், சு.மோகன் ராஜ், ஊரப்பாக்கம் இரா.உத்திர குமாரன் அனகாப்புத்தூர் சி.சிவாஜி, சண்.சரவணன், கரைமா நகர் தே.சுரேஷ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, வீரவேல், ரெ.கதிர் வேல், ஏ.எம்.ஜி.பழனிசாமி, தி.ஆனந்தன், கூடுவாஞ்சேரி எஸ்.செவ்வேல், திருமங்கையன், இ.தன சேகர், விடுதலை நகர் பெ.சி.செய ராமன், செம்பாக்கம் கு.வைத்திய லிங்கம், பூவை.க.தமிழ்செல்வன், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, ந.கதிரவன், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத் தலைவர் ந.பசு பதி ஆகியோர் கலந்து கொண்ட னர். பல்லாவரம் இளைஞரணி ச. அழகிரி (எ) நரேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment