ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* ஒடிசா முதலமைச்சரின் சிறப்பு தனி செயலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் முதலமைச்சர் முன்னிலையில் பிஜூ ஜனதா தளத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் முக்கிய பதவி கிடைக்க வாய்ப்பு.

* மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திடுக, வி.பி.சிங் சிலை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடி அரசுக்கு வேண்டுகோள்.

* தெலங்கானா தேர்தல் பரப்புரையில் பிரியங்கா பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக திரள்கின்றனர். இந்திரா காந்தி போல உருவ ஒற்றுமை என மகிழ்ச்சி.

தி இந்து

* மோடி அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை யானது சமத்துவத்திற்கான அனைத்து போராட்டங்களையும் ரத்து செய்யும் என வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா

* காந்தியாரையும் மோடியையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசிய மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு. முகத்துதி செய்வது  நீங்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு அழகல்ல என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment