கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, நவ. 27- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் (19-.11. 2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் மணியம்மையார் அரங்கில் நடை பெற்றது.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் த.அறிவரசன் தலைமையில் நடை பெற்றது. கிருட்டினகிரி நகர தலைவர் கோ.தங்கராசன் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.

மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் தொடக்க உரையாற்றினார். .அதனைத் தொடர்ந்து தோழர்கள் ஒவ் வொருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றியும், விடுதலை சந்தா சேர்ப்பது பற்றியும் தங்கள் கருத்துக்களை எடுத் துக் கூறினர். அதன் பின் மாநில பகுத்தறிவாளர்கள் துணைத் தலைவர் அண்ணா சரவணன் உரையாற்றினார். இறுதியாக தலைமை கழக அமைப் பாளர் கோ. திராவிட மணி உரையாற் றினார்.

மேலும் மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், செய லா ளர் பெ.செல்வேந்திரன்,ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேசன், துணைச் செயலாளர் ராஜேந்திரபாபு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் மு. வேடியப்பன், காவேரிபட்டினம் ஒன் றிய மேனாள் தலைவர் சி. சீனிவாசன் , மேனாள் மண்டல இளைஞர் அணி செயலாளர் மு. சிலம்பரசன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

இறுதியாக மேனாள் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆட்டோ ராஜா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பொதுவுடமை இயக்க தோழரும், கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியுமான தோழர் சங்கரய்யா அவர்களின் மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை யும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின்  பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை சந்தாக்களை சேர்த்து தமிழர் தலை வரிடம் வழங்குவது என தீர்மானிக் கப்படுகிறது.

No comments:

Post a Comment