குஜராத்தில் அதிர்ச்சி! தேர்வு அறையில் 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

குஜராத்தில் அதிர்ச்சி! தேர்வு அறையில் 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

ராஜ்கோட், நவ. 7-  குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9ஆ-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரி ழந்தார்.

சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக் குள் நுழையும் போது மயங்கி விழுந்தார்.

நினைவிழந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழப்புக்கு காரணம் அறிய, அவரது உடல், உடற் கூராய்வுக் காக அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் நுழையும்போது மாணவிக்கு மாரடைப்பு நேரிட்ட தால், பள்ளி செயல்பாடுகள் மற் றும் ஆசிரியர்கள் தந்த அழுத் தங்கள் எதுவும் அவரது உடல் நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா என்பது குறித்தும் ஆசி ரியர்கள் மற்றும் சக மாணவிகளி டமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் இளம் வயதினர் மார டைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் நவராத்திரியின்போது 20க்கும் மேற்பட்டோர் கர்பா நடனத் தின்போது மாரடைப்பால் மரண மடைந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், 9ஆ-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணமடைந்திருப்பது குஜராத் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

குஜராத்தில் மரக்கறி உணவு களை உண்ணும் பழக்கம் அதிகம் உள்ளது.

மதத்தின் மீதான வெறி காரணமாக இறைச்சி உணவை உண்பதை சட்டவிரோதம் என்ற பார்வையை அந்த மாநிலத்தில் ஊன்றி விட்டார்கள். இதன் காரணமாக பெரும் செல்வந்தர்கள் இறைச்சிக்கு இணையான புரதங்களை விலை உயர்ந்த உலர் பழங்கள் கொட்டைகள் மூலம் சரிசமமாக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் ஏழைகளும் நடுத்தர மக்களும் மரக்கறி உணவை மட்டுமே உண்டு உடலுக்குத் தேவையான புரதம் தாதுப்புக்கள் சரிவிகிதம் கிடைக்காமல் உள் ளனர்.

கரோனாவிற்கு பிறகு சரிவிதிக ஆற்றல் கிடைக்காமல் குறைந்த வயதிலேயே மாரடைப்பால் மர ணிக்கும் கொடுமை நிகழ்ந்து வருகிறது.

No comments:

Post a Comment