நாடாளுமன்றத்தில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

நாடாளுமன்றத்தில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில்

புதுடில்லி, நவ. 19- மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய முடியும்.

இவ்வாறு தாக்கல் செய்யும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரம் பல மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. அந்த வகையில் மக்களவையில் 713 தனி நபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளனு என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக மக்களவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், "பாலின சமத்துவம், பொது சிவில் சட்டம், பருவநிலை மாற்றம், தண்டனை சட்ட திருத்தம் உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் பெரும்பாலான மசோதாக்கள், தற்போதைய பா.ஜனதா அரசு அமைந்ததும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்யப் பட்டவை ஆகும். 

அதேநேரம் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல தனிநபர் மசோதாக்களும் நிலுவையில் இருப்பதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment