மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை


மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நவா. ஏழுமலை, மாவட்ட இளைஞரணித் தலைவர் கே. பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு. இரமேஷ், நகர கழக செயலாளர் சு. பன்னீர்செல்வம் ஆகிய கழகப் பொறுப்பாளர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பங்காரு அடிகளார் மறைவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி அடிகளாரின் மூத்த மகன் கோ. ப. அன்பழகனிடம் வழங்கினார்.  உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்  சுந்தர் ஆகியோரிடமும்  தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது. (20.10.2023)


No comments:

Post a Comment