இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்

சென்னை, அக். 7-  பள்ளிக்கல்வி துறை செயலர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து, பட்டினிப் போராட் டத்தை இடைநிலை ஆசிரியர்கள் திரும்பப் பெற்றனர். வரும் 9ஆ-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம் போல பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரி யர்களும், பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பின்படி பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் சென்னை டி.பி.அய். வளாகத்தில் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.

இவர்களை காவலர்கள் கடந்த 5ஆ-ம் தேதி காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதில் பகுதிநேர ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் போராட் டத்தை திரும்பப் பெற்று சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

அதேநேரம் இடைநிலை ஆசி ரியர்கள் போராட்டத்தை தொடர் வதாக அறிவித்து மீண்டும் டி.பி.அய். வளாகம் முன்பு கூடினர். இதை யடுத்து, மீண்டும் காவலர்கள் அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்த இடை நிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (6.10.2023) பேச்சுவார்த்தை நடத் தினார். இதில் உடன்பாடு ஏற் பட்ட தால் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

சங்கத்தின் பொருளாளர் கண்ணன் கூறும்போது, ‘மாணவர் நலன் கருதி பணிக்கு திரும்புகி றோம். அரசு மீது நம்பிக்கை உள் ளது. 3 மாதத்துக்குள் முதலமைச்சர் நிச்சயம் உரிய முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் போராட் டத்தை திரும்பப் பெறுகிறோம்’’ என்றார். ஆசிரியர்கள் வழக்கம் போல வரும் 9-ஆம் தேதி (திங்கள்) முதல் பணிக்கு திரும்ப உள்ளனர்.

No comments:

Post a Comment