தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி வழியில் தெலங்கானாவில் காலை உணவுத் திட்டம் ரூ.400 கோடியில் தொடக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி வழியில் தெலங்கானாவில் காலை உணவுத் திட்டம் ரூ.400 கோடியில் தொடக்கம்!

அய்தராபாத்,அக்.7- திராவிட மாடல் ஆட்சியான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பின் பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி செல் லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். 

இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய தெலங்கானா அரசு, அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் தெலங்கானா முதலமைச்சர் சந் திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தர விட்டார். 

இந்நிலையில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பல்வேறு இடங்க ளில் தொடங்கி வைத்தனர். 

ரூ.400 கோடி செலவில் செயல் படுத்தும் இத்திட்டத்தால் 28,000 அரசு பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.

மாணவர்களுக்கு வழங்கப் படும் மெனுவையும் பள்ளிக் கல் வித் துறை தயாரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை கோதுமை ரவா உப்புமா மற்றும் சட்னியும், செவ்வாய்க்கிழமை அரிசி ரவா கிச்சடியுடன் சட்னியும் வழங்கப் படவுள்ளது.

புதனன்று பம்பாய் ரவா உப் புமா மற்றும் சட்னி, வியாழக் கிழமை ரவா பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை தினை ரவா கிச்சடியுடன் சாம்பார், சனிக் கிழமை கோதுமை ரவா கிச்சடி மற்றும் சட்னி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள காலை உணவுத் திட் டம் மற்ற மாநிலங்களுக்கு முன் னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment