பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கியப் பிரிவின் இரண்டாவது கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கியப் பிரிவின் இரண்டாவது கூட்டம்

சென்னை, அக்.3- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் ஆங்கில இலக்கியப் பிரிவின் இரண்டாவது கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று மாலை 5.30 மணி அளவில் அண்ணா சாலையில் அமைந் துள்ள எல்.எல்.ஏ. வளாகத்திலுள்ள புதுமைப்பித்தன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கணினி தொழில்நுட்ப அணியில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் சேலம் தரணிதரன், டேரன் அக்கி மோக்ளு மற்றும் ஜேம்ஸ் ராபின்சன் எழுதிய  ‘நாடுகள் ஏன் தோற்கின்றன?’ WHY NATIONS FAIL? என்ற ஆங்கில புத்தகத்தைத் திறம்படத் திறனாய்வு செய்தார். ‘இன்ஸ்டிடியூஷன்’ என்று சொல்லப்படுகின்ற அரசு நிறுவனங்களில் (நீதி மன்றம் புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள்) வெளிப்படைத்தன்மை இல்லாதது மிக முக்கிய காரணம் எனப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததை விளக்கிப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் ஆங் கிலத்தில் சிறப்பானதொரு உரையினை பொழிந் தார். 

முன்னதாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வ.மீனாட்சிசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். சென்னை இலக்கிய குழுவினை சார்ந்த கிருபா மற்றும் பிரேம் நிகழ்ச் சியைச் சிறப்பாக நடத்தினார். ஏராளமான நண்பர் கள் குறிப்பாகப்  இளைஞர்கள் பலர் வந்திருந்தது சிறப்பு. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்கம் சார்ந்து முழுமையாக ஒரு ஆங்கில இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், அதுவும் நகரத்தின் மய்யப் பகுதியில் நடத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற அரங்கில் இலக்கியப் பிரிவு இரண் டாவது நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. 

கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘பெரியார் களம்' இறைவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment