இதுதான் அக்னிபாத்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

இதுதான் அக்னிபாத்!

ஒன்றிய அரசு ‘அக்னிபாத்' என்று ஒரு திட்டம் கொண்டு வந்தது உங்களுக்கு நினை விருக்கும். 

"நான்காண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆளெ டுத்து அவர்களை அக்னி வீரர் களென பயிற்சி யளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவதுதான் அந்த திட்டம்"

அந்த ‘அக்னிபாத்' திட்டத் தில் சேர்ந்து  உயிர் துறந்த முதல் வீரர் அக்‌ஷய் லக்‌ஷ் மன். மகாராட்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் காஷ்மீரி லுள்ள சியாச்சின் பனிமலையில் தேசப் பணியாற்றி உயிரை இழந்திருக்கிறார். 

லக்‌ஷ்மணனை நம்பியிருந்த அவருடைய குடும்பத்திற்கு ஓய்வூதிய பலனோ, மருத்துவ உதவி உத்தரவாதமோ,  ராணுவ கேன்டீன் பயன்பாடோ கூட இல்லாமல், இந்த நாடும் இந்த அரசும் வழியனுப்பி வைக்கும் முதல் இந்திய இராணுவ வீரர் அமரர் அக்‌ஷய் லக்ஷ்மன்.

ராணுவத்தில் உயிரிழக்கும் ஒரு வீரருக்கு  சாதா ரணமாக கிடைக்க வேண்டிய  எவையெல்லாம் இந்த லக்‌ஷமணனின் குடும்பத்திற்கு கிடைக்காது தெரி யுமா?

1. இறுதிக் கால ஓய்வூதியம்

2. பணிப்படி

3. மரணக் காப்பீடு

4. தன் குடும்பத்திற்கான மருத்துவச் சலுகை

5. இராணுவப் படைக்கான வருங்கால வைப்பு நிதி

6. குழந்தை படிப்புகளுக்கான கட்டணச் சலுகை

7.  கல்விக்கட்டணம், விடுதி மற்றும் இறுதிக்கால கருணைத் தொகை சலுகைகள்

8. இராணுவப் படைக்கான குழுக் காப்பீடு

9. உணவு விடுதிகளில் குடும்ப அனுமதி

மேலும் இராணுவ வீரர்களுக்கான மற்ற சலுகைகள்

ராமன் பேரையே ஊர்தோறும் சொல்லும் ஆட்சி யில் லட்சுமணனின் குடும்பமே அரசால் கைவிடப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment