உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு இந்திய கடல்சார் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு இந்திய கடல்சார் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

சென்னை அக 19 சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைத்து முதலீட் டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத் துள்ளார். 

மும்பையில் நடைபெறும் உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில்   கடலோர மாநிலங்களின் முதலமைச் சர்கள் மற்றும் சிறு துறை முகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ளனர். தமிழ்நாட் டின் சார்பாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: இன்றைய உலக நடப்பில், அனைத்து நாடுகளின் வர்த்தகமும் நீர்வழிகளையே நம்பியுள் ளது. சுமார் 80% சதவீதம், பன்னாட்டு சரக்குகள் கப்ப லின் வழியே பயணிக்கின்றன. ஆசிய நாடுகளில், சுமார் 64% சதவீதம் இறக்குமதி சரக்கு களும், 42% சதவீதம் ஏற்றுமதி சரக்குகளும் கையாளப்படு கின்றன. தமிழ்நாடு, 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இந்தியா வின் கடல்சார் செயல்பாடு களில், தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவின் சிறப்புமிக்க சென்னை, எண்ணூர், தூத் துக்குடி ஆகிய மூன்று பெரும் துறைமுகங்கள் தமிழ்நாட் டில் அமைந்துள்ளன. இந்த பெரும் துறைமுகங்களுடன், அறிவிக்கப்பட்டுள்ள 17 சிறு துறைமுகங்களும் உள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகம், பெரும் துறைமுகங்களுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங் களுடன் சிறு துறைமுகங்கள் முக்கிய பங்காற்றி, வளர்ந்து வர மிக சாதகமாக சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ் நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் முக்கிய பங்காற்றுகிறது.

முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக முதலீடு செய்வதை, தமிழ்நாடு முதலமைச்சர் பெரிதும் விரும்புகிறார். முதலீட்டுக்கு நல்ல சிறப்பான சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தருவதில் முனைப்பாக இருக்கிறார் என்பதால், உலக முதலீட்டாளர்கள், தமிழ் நாட்டில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில், சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்த திட்ட மிட்டுள்ளார். இங்கு வந் துள்ள அனைத்து முதலீட்டா ளர்களையும், இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.


No comments:

Post a Comment