நேற்று வரை ‘கேந்திரிய வித்யாலயா'-இன்று சிறீ யா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

நேற்று வரை ‘கேந்திரிய வித்யாலயா'-இன்று சிறீ யா?

ஒன்றிய அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

நாகர்கோவில், அக். 31- குமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெல் லார்மின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒன்றிய அரசு பள்ளியான "கேந்திரிய வித்யாலயா" பள்ளியை பெரும் முயற்சிக்குப் பின் னர் கன்னியாகுமரி மாவட் டத்திற்கு கொண்டு வந் தார்.

அவர் இந்த மாவட் டத்திற்கு இந்த பள்ளியை கொண்டு வரும்போது இந்தப் பள்ளியின் பெயர் கேந்திரிய வித்யாலயா, ஆனால் இந்த ஒன்றிய அரசு பள்ளியின் பெயரை "பி.எம்.சிறீ கேந்திரிய வித் யாலயா" என மாற்றியுள் ளது.

 மாற்றங்கள் வரலாம், அது பள்ளி மாணவர் களை வளர்ச்சிப் பாதை யில் அழைத்து செல்வதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய அதிகாரத் திமிரினால் மதவாதத்தை பள்ளியின் பெயரிலும் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடி யாத ஒன்று.

 தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் 90% வடநாட்டவர் ஆகும். குழந்தைகள் படிக் கும் பள்ளியின் பெயரை மாற்றி தங்கள் மதவா தத்தை திணித்ததற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப் பில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment