திருப்புவனம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

திருப்புவனம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, அக். 22- சிவகங்கை மாவட் டம் திருப்புவனத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் இன்று (22.10.2023) காலை 9 மணிக்கு கலைஞர் நூற் றாண்டு விழா பூங்காவில் நடை பெற்றது.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி  தலைமை வகித்தார். கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கூட்டத்தில் நோக்கத் தின் விளக்கி உரையாற்றினார். . தலைமைக் கழக அமைப்பாளர்கள் மதுரை வே.செல்வம், ராமேஸ்வரம் கே.எம்.சிகாமணி, கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், காரைக்குடி மாவட் டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட் டச் செயலாளர் செல்வமணி, மாநில தொழிலாளர் பேரவைத் தலைவர். கா.சிவா, மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர்  வேம்பத்தூர் செயராமன், மா.சந் திரன், மாவட்ட ப.க. அமைப்பா ளர் சு.செல்லமுத்து, குமார் ஆகி யோர் கருத்துரையாற்றினார்கள்.

நிறைவாக  திராவிட முன்னேற் றக் கழக மாவட்டதுணைச்செயலா ளர்   சுயமரியாதை வீரர் சேங்கை மாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் பரப்புரை பயண கூட் டத்தை மிகச்சிறப்பாக நடத்து வோம் என்றும் கலைஞர் நூற் றாண்டு பூங்காவில் விரைவில் தந்தை பெரியார் படிப்பகம் அமைக்கப்படும் எனஅறிவித்து சிறப்புரையாற்றினார். 

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.இராசாங்கம் நன்றி  கூறினார். கூட்டத்தில்  கழக காப் பாளர் வழக்குரைஞர் ச.இன்பலா தன் ரூ.5.000 வழங்கினார்.

தலைமைக்கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி ரூ.5.000, மாவட் டத் துணைத் தலைவர் இரா.புக ழேந்தி ரூ.5.000, மாவட்ட ப.க.தலை வர் இராசாங்கம் ரூ.5.000, மாவட்ட செயலாளர் பெரு.இராசாராம் ரூ.2.000, திருப்பாச்சி இணையர் அக்னி ரூ.500, மாவட்ட ப.க. அமைப் பாளர் சு.செல்லமுத்து ரூ.500, இலக்குமணன் ரூ.500, காரைக்குடி மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை ரூ.10.000 அறிவித்து மகிழ்ந்தார்கள்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: 

திருச்சியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலை மைச்செயற்குழு கூட்டத்தின் தீர் மானத்தை செயலாக்குவது என் றும், விஸ்வகர்மா போஜனா திட் டத்தை எதிர்த்துபரப்புரைப் பய ணம் மேற்கொண்டு நவம்பர் 3ஆம் தேதி திருப்புவனம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மிகச்சிறப்பான வரவேற் பளித்து கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

No comments:

Post a Comment