பெரியார் விடுக்கும் வினா! (1132) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1132)

ஓரூரில் ஓர் உப்புக் கிணறும், மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் - நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும்; இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்கலாமா? அக் கொடுமை எவ்வளவு வேதனை தரும் அளவுக்குத் தான் ஜாதி முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைப்படுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட ஜாதி முறைகள் இந்நாட்டைவிட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்குவதென்பது திண்ணமாகுமா?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment