அறந்தாங்கி - கீரமங்கலத்தில் பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

அறந்தாங்கி - கீரமங்கலத்தில் பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கம்

அறந்தாங்கி, அக். 5- அறந் தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக அறிவிய லாளர் நரேந்திர தபோல் கார் நினைவு கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் வழி காட்டுதலோடு தமிழ்நாடு முழுவதும் நடைபெறக் கூடிய இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கீரமங் கலத்தில் அன்னை விழா அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கள் கழக தலைவர் தங்க கண்ணன் தலைமை யேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அனைவரையும் வர வேற்று மாவட்ட செயலா ளர் கவீரையா உரையாற் றினார். நிகழ்ச்சியினை தொடங்கி கீரமங்கலம் திமுக நகர செயலாளர் கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் கலந்து கொண்டு கருத்துரையாற் றினார். 

தொடர்ச்சியாக பகுத்தறிவாளர்கள் கழக பேச்சாளர்கள் தஞ்சை பாவலர் பொன்னரசு, மாநில பகுத்தறிவாளர் கள் கழக துணைத் தலை வர் தஞ்சை கோபு.பழனி வேல் கலந்து கொண்டு மறைந்த தபோல்கர் ஆற் றிய பணியினை பட்டி யலிட்டு விளக்கினர். மறைந்த தபோல்கர் நாடு முழுவதும் ஒரு மருத்து வராக இருந்து கொண்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு என்னென்ன பணிகள் எல்லாம் அவரால் செய் யப்பட்டது, செய்தார்கள் என்பதையெல்லாம் விரி வாக விளக்கமாக எடுத் துக் கூறினர். தொடர்ச்சி யாக மாவட்ட கழக தலைவர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், அறந் தாங்கி நகர தலைவர் வேலுச்சாமி, பகுத்தறிவு பால்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் மகாராஜா ஆகியோரும் உரையாற்றினர். 

மற்றும் பல்வேறு கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மாலதி வீரையா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment