ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

அமராவதி,அக்.22-ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் நேற்று (21.10.2023) பதவியேற்றுக்கொண்டனர். 

உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு விஜய வாடாவில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தும்மலப்பள்ளி கலேஷேத்திரம் அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

ஹரிநாத் நுனேபல்லி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜெகதம் மற்றும் நியாபதி விஜய் ஆகியோர் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதிகள் ஆவார். இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment