நவ.1 உள்ளாட்சிகள் நாள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

நவ.1 உள்ளாட்சிகள் நாள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

 சென்னை,அக்.22- உள்ளாட்சிகள் நாளான வரும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. கிராம சபைக் கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment