விஜயகரிசல்குளம் 2ஆம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

விஜயகரிசல்குளம் 2ஆம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன

விருதுநகர், அக்.19 சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணம், சுடு மண்ணால் செய்யப்பட்ட மணி, சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சக்கரம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இதுவரை 4,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதனை கண்காட்சியில் வைக்கும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. முதலாம் கட்ட அகழாய்வில் வைக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியை இதுவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் 29 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் கூறினார்.


No comments:

Post a Comment