சிவந்தாம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

சிவந்தாம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

சிவந்தாம்பட்டி,செப்.28- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்துள்ள சிவந் தாம்பட்டி சமத்துவபுரம் முன்புறம் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார்.

மாவட்ட இளைஞரணிச் செய லாளர் தி.பொன்மதி அனைவ ரையும் வரவேற்றார்.

மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க.துணைத் தலைவர் அ.சரவணன், பொதுக் குழு உறுப்பினர் மூ.சேகர், மாவட் டத் துணைத் தலைவர் சு.கண்ணன், கந்தர்வகோட்டை ஒன்றியத் தலை வர் சு.சித்திரவேல், ஒன்றியச் செய லாளர் த.செல்வகுமார், திராவிட மாணவர் கழக மாவட்டத் தலை வர் நே.குட்டிவீரமணி, மாவட்டச் செயலாளர் இரா.யோகராஜ், புதுக்கோட்டை நகர இளைஞர ணித் தலைவர் தாமரைச்செல்வன், கந்தர்வகோட்டை ஒன்றிய இளை ஞரணித் தலைவர் மா.தமிழ்மாறன், ஒன்றிய இளைஞரணிச் செயலா ளர் மூ.சே.உதயச்செழியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திராவிட மாண வர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் துவக்க வுரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த கோவை ரா.அன்புமதி சிறப்புரையாற்றினார். அவருடன் மேலும் விசிக சமூக நல்லிணக்கப் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் வீரவிடுதலை வேந்தன் பெரியார் பிறந்த நாளை கிரா மங்கள் தோறும் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

கந்தர்வகோட்டை ஒன்றிய திராவிட மாணவர் கழகத் தலைவர் ம.அறிவுமணி அனைவருக்கும் நன்றி கூறினார். அப்பகுதியில் வசிக்கும் கிராமப் பொதுமக்களும் மழலையர்களும் கூட்டத்தில் ஆர் வத்துடன் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment