மதுரை பீபிகுளம் நேதாஜி மெயின் ரோடு முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்ட வீட்டு மனைகளை, நீர்வரத்து மற்றும் பாசனம் இல்லாது நகர்ப்புறம் ஆக மாற்றி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குடிநீர், மின்சாரம் பாதாள சாக்கடை இணைப்பு என்று அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, தற்போது நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றம் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக 5000 குடும்பங்கள் வாழ்ந்து வரும் பீபி குளம் பகுதியினை பாதுகாக்க உதவ வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சங்க தலைவர் சி.ஜெய பால், துணை செயலாளர், எஸ்.இளையராஜா. க.பிச்சைபாண்டி, இரா.சுரேஷ். ஆகியோர் வேண்டுகோளின்படி திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணி செயலாளர் நா.கணேசன் மற்றும் தலைமைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment