திருத்துறைப்பூண்டியில் சமூகநீதி பாதுகாப்புப் பேரணி நடத்திட கலந்துரையாடல் கூட்டம் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

திருத்துறைப்பூண்டியில் சமூகநீதி பாதுகாப்புப் பேரணி நடத்திட கலந்துரையாடல் கூட்டம் முடிவு

திருத்துறைப்பூண்டி, செப். 26- திருத்துறைப்பூண்டி கழக ஒன்றிய, நகர இளைஞ ரணி கலந்துரையாடல் கூட்டம் 16.09.2023 மாலை 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி ராஜமாணிக்க நாடார் தெரு (சி.பி.அய்.(எம்) அலுவலகத்தில் நடை பெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜெ.உமாநாத் தலைமையில் நகர தலைவர் சு.சித்தார் தன், பொதுக்குழு உறுப் பினர் தி.குணசேகரன், தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாளை ஒட்டி திருத்துறைப் பூண்டியில் பெரியார் பட ஊர்வலம் சமூகநீதி பாது காப்பு பேரணி வரும் 29.09.2023 ஒத்த கருத் துள்ள தோழர்கள்  DYFI, AIYF, AISF, SFI, மே17 இயக்கம், திமுக, தமுமுக, விசிக, மக்கள் அதிகாரம், அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வட்டம் ஆகிய வற்றுடன் இணைந்து நடத்தப்படும் என கலந் தாய்வின் படி முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏ.கே. வேலவன், விசிக மாவட்ட துணை அமைப்பாளர் இ.வீரகுமார், தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.வெங்கடேஷ்குமார், தி.மு.க ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பா ளர் எம்.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், மாவட்ட மாணவர் கழ கத் தலைவர் கே.அழகே சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment