காவிரி பிரச்சினை : வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

காவிரி பிரச்சினை : வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

சென்னை, செப்.28  தமிழ் நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கருநாட காவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதேநேரத்தில், முறைப் படி தமிழ்நாட்டுக்கு உண்டான நீரை கரு நாடகம் வழங்க வலி யுறுத்தி தமிழ் நாட்டிலும் சில இடங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

இதற்கிடையே, கருநா டகாவில் தமிழர் கள் தாக்கப்படுவது போன்ற பழைய காட் சிப் பதிவுகள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகின்றன. இதுபோன்ற காட்சிப் பதிவுகளை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று காவல் துறை தலைமை இயக் குநர் எச்சரித்துள் ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் நேற்று (27.9.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி பிரச்சினை சம்பந் தமாக, கருநாடகாவில் தமிழர்கள் தாக்கப்படு வதுபோன்ற பழைய காட்சிப் பதிவுகள் மற்றும் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் சிலர் தற்போது பரப்பி வருகின் றனர்.

இத்தகையை வதந் திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண் டாக்கி, அதன் விளைவாக சட்டம்- ஒழுங்கு பிரச் சினைகளுக்கு வழிவகுக் கும். இவ்வாறான வதந் திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பொதுமக்கள் விழிப் புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு காவல் துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

2 பேர்மீது வழக்குப் பதிவு: இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தாக்கப் பட்ட படங்களை தற்போது நடைபெறுவ தாக மதுரை மாவட்டம் கருப்பாயூ ரணி பகுதி யைச் சேர்ந்த சீமான் மற்றும் நெல் லையைச் சேர்ந்த செல் வின் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட் டுள்ளது. தலைமறை வாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment