திருப்பத்தூர் மாவட்டத்தில் 200 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் 200 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு

திருப்பத்தூர், செப். 14- திருப்பத்தூர் மாவட்ட  திராவிடர் கழகம் சார்பில்  செப்டம்பர் 17 தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா  எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்த கலந் துரையாடல் கூட்டம்.  கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவர்  அவர்களின் பெரியார் இல்லம் சாமநகரில் நேற்று (13.9.2023) மாலை 5.30  மணியளவில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவர் தலைமை வகித்தார்.

பெ.கலைவாணன் மாவட்ட செயலாளர் கடவுள் மறுப்பு  வாசகம்  சொல்லி கலந்துரை யாடல் கூட்டத்தை துவக்கி னார்.

 நகர தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார்.

இக் கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில மகளிரணி பொருளாளர் இ.அகிலா தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்.

மேலும் இதில் மாவட்ட துணைத் தலைவர் தங்க.அசோ கன்,  மாவட்ட விடுதலை வாச கர் வட்ட அமைப்பாளர் அன் பழகன்,  மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வன்,   மாவட்ட இளைஞ ரணி தலைவர் எஸ்.சுரேஷ் குமார்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனக ராஜ், மாவட்ட தொழிலாள ரணி செயலாளர் ஆர்.பன்னீர், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் கே. மோகன், வாணியம்பாடி நகர தலைவர் அன்புச்சேரன், மாவட்ட ப. க.  செயலாளர்  கோ.திருப்பதி, மாவட்ட ப. க. அமைப்பாளர் குமரவேல், நா. சுப்புலட்சுமி மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர்,  கமலாம்பாள், விஜயா அன்பழகன்  மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்,  தாமரை மகளிரணி, மாதனூர் ஒன்றிய தலைவர் மு. வெற்றி, மாதனூர் ஒன்றிய செயலாளர் சே.வெங்கடேசன், சோலை யார்பேட்டை தலைவர் க. மதி யழகன்,  சோலையார்பேட்டை  அமைப்பாளர்  ராஜேந்திரன், சோலையார்பேட்டை கிளை  செயலாளர் தா. பாண்டியன்  , கந்திலி ஒன்றிய செயலாளர் நாகராசன்,  சுந்தரம்பள்ளி ஒன்றிய தலைவர்  கோ. சங்கர், விடுதலை வாசகர் வட்டம் பெருமாள்சாமி, தோழர் முகமத், நகர அமைப்பாளர் க. முருகன், மாவட்ட விடுதலை வாசகர் வட்டம் மாவட்ட துணைத் தலைவர் வ. புரட்சி,  மாவட்ட ஆசிரியரணி, லக்கி னாக்கியன்பட்டி  கிளை தலை வர் சரவணன், லக்கினாக்கியன் பட்டி கிளை செயலாளர் லட் சுமணன், ரவி மாவட்ட ஆசிரி யரணி பொறுப்பாளர், ஜெய் சங்கர், மாவட்ட விடுதலை வாசகர் வட்டம் மாவட்ட துணை அமைப்பாளர் ஆ.ப. செல்வராஜ்,  தோழர்கள் ஞானம்,பெரியார் செல்வம்,   முத்து,  காக்கங்கரை சந்தோஷ்  குழந்தை யேசு, பிரபு, ஆகி யோர்கள்  பங்கேற்று  விழா சிறப்பாக நடைபெற தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சர வணன் அவர்கள்  தந்தை பெரியார்  குறித்தும், விழா ஏற் பாடுகள் குறித்தும் சிறப்புரை யாற்றினார். 

இதில் பங்கேற்ற கழக பொறுப்பாளர்கள், தோழர் கள் விழா சிறப்பாக நடைபெற தங்களால் இயன்ற  நிதி உதவி அளித்தனர்.

காளி தாஸ் - 500,  அன்பு சேரன்-500, திருஞானம்-500, தாமரைக் கனி - 1000, ஞானம் - 500, குமரவேல்-500, பன்னீர்- 500, மோகன்-500, பெருமாள் 200, நாகராசன் - 500,  விஜயா அன்பழகன்-1000, அக்ரி அர விந்த் - 1000, ரவி- 1000 ஆகியோர் வழங்கினார்கள்.

பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர்  தங்கள் பகுதி ஏழை மக்கள் சுமார் பத்து நபர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த நாள் நினைவாக உடை களை வழங்கி சிறப்பிப்பதாக தெரிவித்தார்.

எம். ஆனந்தன் மாவட்ட தலைவர் தொழிலாளரணி மறைவு, மாவட்ட அமைப்பா ளர் வி.ஜி.இளங்கோ மற்றும்  எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா அவர்களின் அத்தை சாரதாஅம்மாள் மறைவு, இரா. பழனி மேனாள் கிருஷ்ணகிரி மாவட்ட ப. க. தலைவர் அவர்களின் வாழ்வி ணையரும் மகளிர் பொறுப்பா ளர் ப. மங்களாதேவி மறைவு மற்றும் மலர் தட்டச்சு பயிலகம் ஆசிரியர் கந்தசாமி  மருமகன் இரத்தின குமார் மறைவு ஆகி யோர்கள்  அவர்களின் மறை வுக்கு இரங்கல்  தெரிவிக்கப்பட் டது. கிருஷ்ணகிரியில் தந்தை பெரியார் மய்யம், தந்தை பெரியார் வெண்கல சிலை, அம்பேத்கர் படிப்பகம் ஆகிய வற்றை சிறப்பாக செய்து முடித்து, அதை எழுச்சிமிகு விழாவாக நடத்தி காட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட கழகத் தோழர்களுக்கு பாராட்டு களை தெரிவித்து கொள்கிறது என்றும், செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட் டம் முழுவதும் 200 இடங்களில் பெரியார் படங்களை வைத்து மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பது எனவும், 

திருப் பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து பறை இசை முழங்க அனைத்து இயக்க தோழர்களுடன் ஊர் வலமாக புறப்பட்டு வி. பி. சிங் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து   பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது என்றும், 

திருப் பத்தூர் மாவட்டத் திற்கென்று   கழக அலுவலகம் திறப்பது என்றும் தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.

இறுதியாக அக்ரி அரவிந்த் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment