தொழில்முனைவோரான 14 வயது சிறுமி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

தொழில்முனைவோரான 14 வயது சிறுமி!


தெரு ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்களையே கண்டு கொள்ளாமல் செல்லும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் தெருக்களில் இருக்கும் விலங்குகளை குறிப்பாக, நாய்களை சுத்தம் செய்து, பராமரித்து அவற்றை தத்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. Heaven Of Animals  என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு நாய்களை தத்துக் கொடுப்பது மட்டுமில்லாமல், அவைகளுக்கு தேவை யான மருத்துவ உதவிகள் மற்றும் தடுப்பு ஊசிகளும் செலுத்துகிறார்கள். அப்படிப்பட்ட அமைப்பிற்கு 14 வயது சிறுமி தூதுவர் (அம்பாசிடர்) என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? விலங்குகள் மேல் கொண்ட பிரியத்தாலும், ஆர்வத்தினாலும் பள்ளியில் படிக்கும் வயதிலே தொழில்முறை தூதுவராக மாறிய கேசிகா, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் கூட..

முதல் முறையாக கூட்டம் நிறைந்த இடத்தில் நாய்க் குட்டிகள் அனைத்தும் ரொம்பவே பயந்து காணப்படுகின்றன. அவைகளின் பார்வையில் ஒருவித நடுக்கம் தென்படுகிறது. சிறிய வயதிலிருந்தே நாய்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் நான் போய் தத்து எடுக்கும் நிர்வாகியிடம் பேசினேன். அவரிடம் நான் கேட்டது ஒன்றுதான். "நாய்க்குட்டிகளை கொஞ்சலாமா?" என்று. அவர் சரி என்று சொல்ல, நாய்க் குட்டிகளுடன் நான் விளையாட ஆரம்பித்தேன். அதனால் அவைகளுக்கு முதலில் பயம் நீங்கியது. அதன் பிறகு அவைகளை எல்லாம் சுத்தம் செய்தேன். என்னுடைய அன்றைய ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) நாள் நாய்களுடன் நலமாகக் கழிந்தது.

நான் நாய்க்குட்டிகளுடன் விளையாடிக் கொண் டிருந்த போது, பலர் வந்து விவரம் கேட்டார்கள். ஆனால் யாரும் அவர்களை தத்து எடுக்க முன்வரவில்லை. எனக்கு ரொம்பவே வருத்த மாகிவிட்டது. இந்த குட்டிகளைப் பார்க்க வருத்தமாக இருந்தது. உடனே நான் தெருக்களில் இந்த மாதிரி ஆதரவற்ற நாய்களை தத்தெடுப்பதால் என்னென்ன பயன் என்று அங்கு பேசினேன். மொத்தம் பத்து நாய்க் குட்டிகள் தத்து கொடுக்க கொண்டு வந்திருந்தார்கள்.

என் பேச்சைக் கேட்ட மக்கள், என்ன யோசித் தார்கள் என்று தெரியவில்லை. பத்து குட்டிகளில் எட்டு குட்டிகள் தத்து எடுக்கப்பட்டன. அதை பார்த்த அமைப்பின் நிர்வாகி, என்னை அமைப்பின் தூது வராக (அம்பாசிடராக) இருக்கும்படி கோரிக்கை விடுத்தார். எனக்கும் அது பிடித்துப் போக, அன்று முதல் Heaven Of Animals -இன் தூதுவராக நான் மாறினேன். அதன் பிறகு எங்கு நிகழ்ச்சி நடைபெற்றாலும் எங்களின் அமைப்பு சார்பாக அனைத்து நிகழ்ச்சியிலும் நான் பங்கு பெற ஆரம்பித்தேன்.

நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து வருவார்கள். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து செயல் படுவோம். அதில் நிகழ்ச்சிக்கு நாய்க்குட்டிகளை சுத்தம் செய்து தடுப்பூசி போட்டு பாலின வேறுபாட்டை அறிய அவர்களிடம் கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக் கொண்டு போவோம். நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் ‘வெளியில் காசு குடுத்து நாய்க் குட்டிகளை வாங்குவதற்கு பதில் இந்த குட்டிகளை தத்து எடுக்கலாம்’ என்று அவர் களிடம் வலியுறுத்துவோம்.

நாய்க்குட்டிகளை பார்த்து சிலர் எடுத்து செல் வார்கள். ஒரு சிலர் நாய்க்குட்டிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தத்து எடுப்பார்கள். அவ்வாறு தத்து எடுப்பவர்களிடம் அவர்களின் முழு விவரங்களை வாங்கிக் கொள்வோம். காரணம், ஒரு சிலர் குட்டிகளை ஒரு ஆர்வத்தில் வாங்கிச் செல்வர். அதன் பிறகு அதனை சரியாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதனை ஒழுங்காக கவனித்துக் கொள்கிறார்களா நல்ல விதத்தில் பராமரிக் கிறார்களா என்று நேரில் சென்று ஆய்வு செய்வோம். சில சமயம் காணொலி மூலமும் தெரிந்து கொள்வோம். அவர்கள் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தால் நாய்க் குட்டிகளுக்கு அடுத்தடுத்து போடக் கூடிய தடுப் பூசிகளை நாங்களே இலவசமாகவே கொடுப்போம்.

No comments:

Post a Comment