ஆண்களும் குழந்தை பெற்ற ‘அற்புத’ ஆயுஷ்மான் திட்டம் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

ஆண்களும் குழந்தை பெற்ற ‘அற்புத’ ஆயுஷ்மான் திட்டம் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

ஆயுஷ்மான் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்த தலைமைக் கணக்காயர் (CAG) 48387 நோயாளிகள் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ மனைகளிலே சிகிச்சை பெற்றதாகத் தரவுகள் சொல்கின்றனவே, இதற்குத் தங்களின் பதில் என்ன என்று தேசிய சுகாதார ஆணையத்தைக் கேட்டார்.

அதற்கு ஆணையம் தந்த பதில்:

முதன்மையாக இத்தகைய சூழல் எப்பொழுது நிகழும் என்றால் ஒரு மருத்துவமனையிலே பிறந்த குழந்தைக்குச் சிகிச்சை தேவைப்பட்டால் அந்தக் குழந்தையை இன்னொரு மருத்துவமனையிலே தங்க வைத்துச் சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சூழலிலே அம்மா ஒரு மருத்துவமனையிலும் குழந்தை இன்னொரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவார்கள். குழந்தைக்கு அம்மாவின் அடையாள எண்ணே பயன்படுத்தப்படும். எனவே ஒரே நோயாளி இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக ஒரு தோற்றம் ஏற்படுகின்றது எனப் பதிலளித்திருந்தார்.

உடனே கணக்காயர் அந்த 48387 நோயாளிகளின் தரவுகளை ஆய்வு செய்த போது அவர்களில் 23,670 நோயாளிகள் ஆண்கள் என்று தெரிய வந்தது.

அப்படியானால் குழந்தை பெற்ற அப்பாவிற்கு ஒரு மருத்துவமனையிலும் பிறந்த குழந்தைக்கு இன்னொரு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக் கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயற்கைதானே?.

11/2023 CAGஆய்வறிக்கை எண்.11/2023 பக்கம் 52இல் (5.8.2.7) இந்த முறைகேடு பற்றிக் கணக்காயர் தனது குறிப்பினைத் தந்துள்ளார்.

ஆண்களும் குழந்தை பெறும் அதிசயத்தை இந்த சங்கிகளின் டிஜிட்டல் இந்தியாவில் காணும் பெரும் பேற்றைப் பெற்றோம் நாம்.

 - கரும்படைக் கணக்காயன்

No comments:

Post a Comment